அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்மென்பொருளாக தமிழ் குர்ஆன்குர்ஆனில் நீங்கள் விரும்பியவற்றை எளிதில் தேடுவதற்கு \'தமிழ் குர்ஆன் மென்பொருள்\' மூன்றாவது பதிப்பை அறிமுகம் செய்வதில் அகமகிழ்கிறோம். தமிழ் உலகில் பிரிசித்திபெற்ற மொழி பெயர்ப்பைக் கொண்ட இம்மென்பொருள் வலைபின்னல் இணைப்பின்றி இயங்கும் திறன் கொண்டது.இதன் சிறப்பம்சங்கள் :-மைக்ரோ சாப்ட் (MICROSOFT) நிறுவனத்தின் அதி நவீன விண்டோஸ் விஸ்டா (WINDOWS VISTA) வில் கூட இயங்கக்கூடிய தொழில்நுட்பக் கட்டமைப்பு.குர்ஆனில் உங்களுக்கு தேவையான வசனங்களைக் கண்டுபிடித்திட இலகுவான தேடல் வசதி. மேலும் தலைப்பு வாரியாக கோர்வை செய்யப்பட்டுள்ள அட்டவனைத் தொகுப்பு.குர்ஆனை மென்பொருளிலிருந்தே படித்து பயன்பெற அரபி மூலத்துடன் கூடிய மொழிபெயர்ப்பு. இத்துடன் படித்துக் கொண்டிருக்கும் அத்தியாயத்தை இனியகுரலில் நீங்கள் கேட்டும் மகிழலாம்.இக்குர்ஆன் மென்பொருளை பயன்படுத்துவது பற்றிய முழுத்தகவல்களை அறிய உதவிக்களம் மற்றும் முக்கிய வசனங்களை நீங்கள் குறிப்பெடுத்துக்கொள்ள குறிப்பேடு போன்ற சிறப்பம்சங்கள்.இத்தனை வசதிகளுடன் கூடிய தமிழ் குர்ஆன் மென்பொருளை இவ்வுலகிற்காக வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது ஒற்றுமை டாட் நெட். இது இன்டெர்நெட் இஸ்லாமிய புரட்சியில் ஒரு மையில் கல்!கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையமுகவரியில் கிளிக் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.
